Sunday, June 6, 2010

மனிதனைப்பற்றி

உலகின் முதல் குற்றவாளி மனிதனே ! 

     மனிதனுக்கு மனிதனே எதிரி !  ஆதி காலம் முதலாகவே தனது சுயதேவைக்காக மட்டுமே மனிதனுக்கு மனிதன் எதிரியாக வாழ பழக்கப்படுதிக்கொண்டிருந்திருகிறான்.

     மரணத்தை எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் பக்குவமும் ஆறறிவாளனுக்கே!! (மனிதனுக்கே).

     தனிமனித கோபமோ, போராட்டமோ, சமுதாயத்தை சீர்திருத்திவிட  முடியாது,   தனிமனித கட்டுப்பாடு,   தனிமனித  ஒழுக்கம் , மற்றும் அரசின் நெருக்கடியான சட்டத்தின் மூலமே சமூக அவலங்கள் சீர்திருத்தப்படும் .

     எந்த ஒரு மனிதனும் தனக்குன்னு ஒரு சுயநலம் இல்லாமல் எந்த செயலையும் செய்றதில்லை பிச்சை போடுவது முதற்கொண்டு.  உதரணமாக பிச்சை போட்டால் வாங்கிகொண்டவர்கள் வாழ்த்துவார்கள் என்றும் இதனால் தனக்கும் , தன் சந்ததிக்கும் , தான் சார்ந்து இருப்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்னு நம்புறான் இது நடைமுறையில் உண்மை.

     நம் முன்னோர்களெல்லாம் நாம் நெறியுடன் வளரவேண்டும் என்பதற்காக , நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கின்றதென்றும்  அதன் பெயர் கடவுள் என்றும் கூறி வளர்த்தார்கள் இதனால் இறை பக்தி வளர்ந்தது .  சாமி சிலையை வடிக்கிறவன் மனிதன் , எந்த சாமியோட உருவம் எப்படி இருக்கணும்னு நிர்ணயம் செய்றதும் மனிதன் , அவ்வாறு வடித்த சிலையை கோவில்களில் வைத்து பூஜை செய்கிறான் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பென்று விளம்பரபடுத்துகிறான்  , சிறப்பு வழிபாடு , சிறப்பு பூஜை என்றும் அவனே விளம்பரப்படுதுகிறான் .  சாமி சிலையை மூலதனமாக வைத்து பணமும் , புகழும் சம்பாதிக்க நினைக்கிறான். பால், தயிர் , பழம், பஞ்சாமிர்தாம் , இளநீர் , தேன் , மஞ்சள் , சந்தனம் ,என்று சாமி சிலையில் ஊற்றி மந்திரம் தெரிந்த ஆசாமி இந்த பணியை செய்றான் , கோவிலுக்கு வெளியில் பசி, பட்னியோட நிறையபேர் பிச்சை எடுத்துட்டுருப்பாங்க ஆனால் உள்ளே பார்த்தல் உயிரற்ற கல் சிலைக்கு மேற்குறிப்பிட்ட உணவுப்பொருளால் அபிஷேகம் நடக்கும் உணவுப்பொருளை ஏன் இப்படி  வீனடிக்குறாங்கன்னே புரியல ?,சாதாரண தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினால் போதும் சுத்தமாக இருப்பதற்காக !.

     இன்றைக்கு இறை பக்தி அதீதமாக இருப்பவர்களில் ஒரு சிலரே உண்மையானவர்கள்.  நிறைய தவறு செய்ய வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு எற்பட்டுபோச்சு, அதனால சாமி கும்பிடாதவனல்லாம் நல்லவனும் கிடையாது.  தானும், தனது சந்ததியும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக சக மனிதனை எமாத்தியோ , லஞ்சம் வாங்கியோ ,லஞ்சம்கொடுத்தோ ,துரோகம் செய்தோ , ஏன் கொலை கூட செய்ய தயங்குவதில்லை .

     இன்னும் ஒரு சில கோவில்கள்ல பார்த்திங்கனா பூசாரின்னு ஒருத்தர் இருப்பார் அவர் சட்டை போட்டிருக்கமாட்டார் , அழுக்கான வேஷ்டி தான் எப்போதும் கட்டியிருப்பார் .  அது அவரோட வறுமையா கூட இருக்கலாம்  அது போகட்டும் .  அவர் தான் அந்த சாமிக்கு எல்லா பணிகளும் செய்வார் , அவர் வேலையே அதுவாகத்தானிருக்கும் ,  அந்த பூசாரிக்கோ அல்லது அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ , அவர்களது உடலில் சாமி புகுந்துவிட்டதாக சொல்லுவார்கள் சாமி புகுந்த அந்த பக்தரோ , பூசாரியோ தன்னை மறந்த பரவசநிலையில் ஆடுவார்கள் ,பெருமூச்சி விடுவார்கள் ,கத்துவார்கள் , ஏதேதோ பேசுவார்கள் .  அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் புரியாது கோவில் பூசாரிக்கோ , அல்லது ஒருசிலருக்கோ தான் புரியும் .
இது போன்ற கோவில்களில் தான் மொட்டை அடித்தல் , காது குத்துதல் , பரிகாரம் செய்தல் போன்ற வேண்டுதல் நிறைவேற்றம் நடக்கும், இக்கோவில்களில் இருக்கும் பூசாரியிடம் பக்தர்கள் தனது குறையை கூறும்போது  உடனே பூசாரிக்கு சாமி வந்து விடும்  உடனே பூசாரிக்குள்  இருக்கும் சாமி உனது குறையை தீர்த்து வைத்தால் ஆடு , கோழி விருந்து தறுகிறாயா?? எனக்கேட்கும் பக்தனும் அதற்க்கு  தலையாட்டி சம்மதம் தெரிவிப்பான் , மொட்டை அடித்தல், காது குத்துதல் நிகழ்ச்சிகளில் கூட ஆடு, மற்றும் கோழி விருந்து நடக்கும் விருந்துக்கு தனது  அண்ணன் , தம்பி, மாமன், மச்சான் ,அங்காளி , பங்காளி என அனைவரையும் கூப்பிட்டு ஒரு கூட்டமாக சாப்பிட வைத்து விட்டு பின்னர் தான் பசி, பட்டினியோடு கிழிந்த உடையணிந்த பரிதாபமாக வரிசையில் நின்று கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு போடுவான்.  எதுக்காக மொட்டயடிதலுக்கும், காதுகுத்தலுக்கும் ,ஆடு , கோழி வெட்டி விருந்து  வைக்கிறான்னே  தெரியல . அனால் ஒன்று   !!  தாரளமாக கறி விருந்து வைத்த மகிழ்ச்சியும் ,சாப்பிட்ட சந்தோஷமும் அவன் அடைந்திருக்கிறான் என்பது மட்டும் நல்லாபுரியுது.

    தனக்கு ஒரு துன்பம்னா கடவுளுக்கு அது செய்றேன் , இது செய்றேன்னு வேண்டிக்கிறான்.  எந்த சாமி கேட்குது ? அது செய் , இது செய்னு .
உயிரை காப்பாத்துற கடவுளே உயிர் பலி கேட்குதுங்குறான், தப்பு பண்ணினால் கடவுள் தண்டிப்பார்னு சொல்றவனே  பயப்படாமல் தவறு செய்துவிட்டு கடவுளுக்கு கமிஷன் கொடுத்து தப்பித்துவிடலாம் என்றும் நம்புறான்.

     பிள்ளையார் பால் குடித்தார்னு சொன்னவனும்  !,அத நம்புனவனும்  !,மெனக்கெட்டு பிள்ளையாருக்கு பால் ஊட்டிவிட்ட வனும்  நம்மாளுதான் !. நம்மாளு !! நம்மாளுதான் !!!

     ஏசுநாதர் சிலை சிரிக்கிறது , அழுகிறது  ,கண்ணில் ரத்தம் வருகிறது என்று சொன்னவனும்  நம்மாளுதான்  !!!

     இவ்வளது சொன்ன நான் ஒரு நாத்திகனான்னு கேட்டா இல்லைனுதான் சொல்வேன் !  பகுத்தறிவாலன்னு வேணும்னா சொல்லலாம்!!, சாமி கும்பிட மாட்டேனானு கேட்டால் அதுவும் இல்லை!!! .  பிள்ளையார் சுழி போட்டுதான் இதை எழுத ஆரம்பித்தேன், பகுத்தறிவாலன்னு சொன்னானே அப்புறம் ஏன் பிள்ளையார் சுழி போடுறான்னு கேட்கலாம் அது ஒன்னும் இல்ல பேனா நல்லா எழுதுதான்னு பார்க்கத்தான்!!!!...


ஜாதி,மதங்கள் மனிதனின் வாழ்வாதாரமா?

No comments:

Post a Comment