Wednesday, December 4, 2013

யாரோ பேசிக்கொண்டது

அவள் : என்னுள் ஊடுருவிட்ட - உன் நினைவுகளால் - நிதமும் நான்
கிறுக்கிக் கொண்டே இருக்கிறேன்.
நீயே வந்து சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை.

அவன் : உன்னுள் ஊடுருவிட்ட என் நினைவுகள் உன்னை நிதமும்
கிறுக்கச் சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.


அவள் : கடிகார முள்துலைத்து...
இந்த நிசப்தங்களைக் கடந்து...
மௌனங்களுடே பேசிக் கொண்டிருக்கிறேன்
உனக்கான நான் இங்கே...!!

அவன் : மௌனங்களுடன் எனக்கான நீ மெளனமாக பேசிக் கொண்டிருந்தாலும்...
உன் மௌனத்தை நான் இங்கே மெளனமாக கலைக்கச்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


அவள் : உன்னை நினைத்தொரு கவிதை எழுதவும் முடியாதொரு வறுமைக் கோட்டுக்குள்
இன்னமும் நான்...!!
மன்னித்துவிடு.

அவன் : என் அன்பையே என் அனுமதியில்லாமல் முழுமையாக களவாடிக் கொண்டவள் நீ...
இருந்தும் ஏன் அந்த வறுமைக் கோட்டுக்குள் நீ...?


அவள் : எப்போதும்,
முரண்பட்டே நிற்கும்
உன்-வார்த்தைகளுக்குள்
முற்றுப்பெறாமலே
முடிந்து போகிறது...
என்-ஒவ்வொரு இரவுகளும்...!!

அவன் : முற்றுப்பெறாத இரவுகள், ஜென்மங்களைக் கடந்ததென்றும், கடக்குமென்றும்
நீ அறிந்தது தானே...


அவள் : என் வாழ்க்கைப் புத்தகத்தின் முகவுரையும், முடிவுரையும்
நீயே எழுதிவிட்டு போ...!! pls.

அவன் : முகவுரை எழுதத்தான் எண்ணுகிறேன்...
முடிவுரை இல்லாமல்...
சாத்தியம் இல்லை தான் . இருப்பினும் உன் வாழ்கை புத்தகத்தை என்னிடம் தந்துவிடு... பத்திரமாய் இருக்கட்டும்.


அவள் : காதலில்லை என்றுசொல்லும் உனதருமை முட்டாள் பெண்ணிற்கு ...
உனக்கே உரிய பாசையில் எல்லாவற்றையும் காதலிக்கக் கற்றுக்கொடு ..plss !!

அவன் : என் நட்பை உன் நட்பிற்கு காதலிக்க கற்றுக்கொடுத்த எனக்கு...
எனதருமை முட்டாள் பெண்ணின் நட்பை. என் நட்பிற்கு,
உன் பாஷையில் கற்றுக்கொடடி பெண்ணே...


அவள் : நான் விழித்தும் ...நீ தூங்கியும் கொண்டிருப்பதால் -நம் காதல்
நிமிசமொருமுறை தூங்கி விழித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

அவன் : நீ விழித்திருந்தாலும்
நான் தூங்கிக்கொண்டிருப்பதாக நீ நினைத்திருந்தாலும்.
என் நினைவு மட்டும் நட்பாய், காதலாய் உயிர்த்திருக்கும்
நீ விழித்திருப்பது போலவே !!


அவள் : அழகான உன் சிரிப்புக்கள் நடுவே ...எதாச்சும் அர்த்தப்படுத்தி
விழித்தபடி கனவு கொள்ளும் என் முட்டாள் விழிகள் ..!!

அவன் : உன் முட்டாள் விழிகளின் உண்மை புரியாமல் நீ ஏன் பிதற்றுகிறாய் .


அவள் : எதுவும் எனக்கிங்கு புதிதில்லை ...
எல்லா வலிகளும் எனக்கே ...
எனக்கு மட்டுமே.. !!

அவன் : உன் வலிகளுக்கு மருந்தாய் நானிருக்க...
உன்னின் மித மிஞ்சிய வலியை என்னுள் பாய்ச்சிவிடும் உரிமை உனக்கிருக்க....
எப்படி எல்லா வலிகளும் உனக்கு மட்டும் சொந்தமாகும்...?
எனக்கும் தான் சொந்தம் .


அவள் : பொய்யென்று ஏதும் எனக்குள்ளில்லை...
மெய்யென்று எதுவும் .. - நீ எனக்குள் தேட ..!!

அவன் : மெய்யாய் நீ கண்டு பிடித்தவன் நான்...
அப்படியிருக்க பொய் எப்படி உனக்குள்ளிருக்கும் ...?


அவள் : காத்திருந்து...
காக்கவைத்து ...
உனக்குள் தொலைந்து விடுவதும் ஒரு சுகம் தான் ..!!

அவன் : எனக்காக நீ காத்திருந்து ...
உன்னை நான் காக்கவைப்பதினால்...
நீ அடையும் சுகத்தை மட்டும் நான் விரும்பாமல் போனாலும்.
எனக்குள் மட்டும் நீ தொலைந்து விடுவது பிடித்திருக்கிறதெனக்கு.


அவள் : என் கிறுக்கல்கள் உங்கள் கவிதைகளை
காதலிப்பதாய் ஒரு சேதி ...
எவ்வளவு தூரம் உண்மை.

அவன் : உன்னைப் போலவே முற்றிலும் உண்மை .


அவள் : ஆழ்ந்து அனுபவித்துத் தான் வருவது - காதலென்றால் ...
எனக்கும் இப்போது அதே நிலை தான்...!!!

அவன் : யாரால் உனக்கு அந்த நிலை ? ஏன் ?


அவள் : சிரிக்கிறாள்.
எனக்குள் நான் ஆழ்ந்து ...
என்னையே நான் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்
என்னுள் நீ இருப்பதால் தானோ?

அவன் : இதிலென்ன சந்தேகம் உனக்கு ?


அவள் : கிறுக்கிக்கொண்டே தான் இருக்கிறேன் ...
என்றாவது ஒருநாள் கவிதையாகாதா என்ற நப்பாசையில் ..!!!

அவன் : கிறுக்கல் தான் காவியமடி பெண்ணே ...
கிறுக்குவதை நிறுத்தாதே.
உன் கிறுக்கலில் தான் என் கவிதையே உயிர் வாழ்கிறது .


அவள் : எதைத்தான் பிடிக்காது இப்போ ?
உன்னைப்பிடித்த பின்பு .
எல்லாமே பிடித்துப்போகிறது.

அவன் : என்னையே பிடித்துபோய்விட்ட உனக்கு
எல்லாமும் பிடிக்கத்தானே செய்யும் ?


அவள் : நான் ஒரு மின்னல் ஆகிறேன் ...
உன் பார்வைகள் என்னுள் இடியென இறங்குவதால்.

அவன் : உன் மின்னலில் தான் நானும் மின்னுகிறேன்.


அவள் : நான் மின்னல் என்றால்
என் மின்னல்களின் வெளிச்சம் நீ ...

அவன் : ஆமாம் ...
இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.....
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.


அவள் : அவனைப் பார்க்கிறாள்.
அவன் : பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறான்.


அவள் : உன்- நிராகரிப்புக்களினுடே .. உயிர் விட்டமுதற் பூ -விது ...
அவன் : மெலிதாய் சிரிக்கிறான்.


அவள் : மீண்டும் - உன் பொய்யான ஏற்றுக்கொள்ளளில் கருக்கிவிடாதே..plss .

அவன் : போன ஜென்மத்தில் என் உயிர் விட்டும் கூட
என்னால் உன்னை நிராகரிக்கமுடியவில்லையே ....
அப்படியிருக்க எப்படி என் ஏற்றுக்கொள்ளல்
உனக்கு பொய்யானதாகப்பட்டது ?


அவள் : வலிமிகுந்த இந்த நிமிடங்கள்.
நொடிப்பொழுதில் கடந்து போகக்கூடும்...
நீ...........நீயாக என்னிடம் பேசும் போது மட்டுமே...!!

அவன் : நிமிடத்திற்கு நிமிடம் நான் உன்னுடனேயே பேசவேண்டும் என்று நீ விரும்புவதையே.... நானும் விரும்புகிறேன் .
ஆனால் காலம் தான் சதி செய்கிறது என்ன செய்ய ?


அவள் : மனதோடு மனம் சண்டையிட்டு
நேரில் பேசக் கேட்கும் .
நேரில் பேசக் கேட்கும் போது...
மீண்டும் சண்டை போடக் கூடுமோ ...?

அவன் : அப்படிக்கேட்டால் உன் மனதை நானும்
என் மனதை நீயும் சமாதாப்படுத்திவிடுவோம் ......


அவள் : நீ இல்லையென்று மறுதலிக்கும் ஓசையெல்லாம்
எனக்குள் ' ஆமென்றே'' ஒலிக்கிறது ...!!
எனக்கேதுமில்லை... நீ அப்படியேயிரு...!!

அவன் : இல்லையென்று சொல்ல எனக்குள் ஏதுமில்லை....
எல்லாம் உன்னிடமே இப்பொழுது.


அவள் : இடியென எல்லாவற்றையும் என்னுள் இறக்கிவிட்டு
இரக்கமற்று அங்கே நீ ...!!
இங்கே நானொரு மழைக்கால மேகமாய் .
நிதமும்,கண்ணீருக்குள் தொலைந்தே போகிறேன் ...!!!

அவன் : மின்னலாய் கூட காண முடியாத தூரத்தில் அங்கே நீ ..!!
மழைக்கால மேதுமில்லை இங்கே.... விழிநீர் மழை வெள்ளமாய் கரைபுரல்கிறது.


அவள் : நான்... நீ ....நாமிருவராகி ...செய்த முதல் தப்பு காதலகிற்று ...!!!
அவன் : ஆகிவிட்டு போகட்டும்விடு ....
இதுதான் காதலென்று நாமும் கற்றுக்கொண்டோமே...


அவள் : தெரிந்து தெளிவாய் குழப்பிய குழப்பத்தில் நீ...
குழப்பத்தின் தெளிவில் நான் ...!!!!

அவன் : ஆமாம் ........இப்பொழுது நானும் தெழிந்தவனாய் உன்னில் .


அவள் : நம்மை அழித்து விடுவார்களோ...?
அவன் : அழியாத பக்கங்கள் நாம் .


அவள் : உங்கள் திறமைகளைக் கண்டே நீள்கிறது எனது ஆச்சர்யங்கள்.
அவன் : நீ பிரசவிக்கும் வார்த்தைகளுக்குள் மறைந்திருக்கிறது என் திறமை...
உன்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும் ஆச்சர்யக்குறியாய் இருந்துவிட்டுப் போகிறேனே.....!!!


அவள் : நீ யார் ?
அவன் : நான் ....
நான் மட்டுமல்ல .....நீயும் கலந்தவன் .


அவள் : யாருமே நுழையமுடியாதபடி பூட்டி வைத்த - என்மனக்கதவின் ...
எந்த வழி நீ நுழைந்தாய் ..?
இன்னும் அதே மயக்கத்தில் நான் ..!!!

அவன் : போன ஜென்மத்தில் நீ என்னிடம் கொடுத்து சென்றிருந்த
கவிதை எனும் சாவியால் திறந்து நுழைந்தது உனக்கு தெரியாதா ...!!!
மயங்கடி பெண்ணே ....என்னால் மட்டுமே நீ மயங்கவேண்டும் .


அவள்: நான் வைத்துக்கொண்டு இல்லையென்றால் உனக்குப்பிடிக்கிறது ...
நீ இல்லையென்று வைத்துக்கொண்டால் எனக்குப் பிடிகிறது ..!!

அவன் : நீ வைத்துக்கொண்டு இல்லையென்றே சொல் ...
நானும் இல்லையென்றே வைத்துக்கொள்கிறேன் ...
நன்றி மட்டும் உனக்கு .


அவள் : நீங்கள் யார் ? எங்கிருந்து வந்தீங்க ?
அவன் : உன்னிலிருந்து தான் ... ஏன் உனக்கு தெரியாதா ?


அவள் : சிரிக்கிறாள்.
அவன் : உன் ஒற்றை சிரிப்பை மட்டுமே பதிலாய் அளிக்கிறபோதிலும் எனக்குள் கவிதை விந்தை பாய்ச்சுகிறாயே.....!!!


அவள் : மறுபடியும் சிரிக்கிறாள். வார்த்தைகள் வரமறுக்கும் தருணங்களில் ...இந்த சிரிப்புக்கள் மட்டுமே எனக்கு கை கொடுக்கின்றன ...tnx for சிரிப்புக்கள் .

அவன் : சிரிக்கிறான்.


அவள் : ஆச்சரியங்களினுடே தொடர்ந்து செல்லும் நம் ஒவ்வொரு நகர்வுகளும் .....நகரட்டுமே விட்டுவிடுகள்.

அவன் : ஆமாம் நான் அப்படித்தான் விட்டுவிடப்போகிறேன் .


அவள்: மௌனியாயிருக்கிறாள்.

அவன் : நீ என்னுடன் பேசாத நேரங்களில் கூட நான் மட்டும் உன்னுடன் பேசிக்கொண்டுதானிருப்பேன்...
என்னால் மட்டும் முடியும் ....
உன்னுடன் மட்டும் அப்படி பேச .
உன்னை போலவே எனக்கு இப்பொழு வார்த்தைகள் வரமறுக்கிறது ...


அவள் : விருப்பு வெறுப்புக்கள் ஊடே
பிடிவாதங்களும்.. லட்சியங்களும் மென
மூட்டை கட்டிவைத்துவிட்டு ...
கனவுகளைச் சுமந்தபடி
நகரமறுக்கும் என் நாட்கள் ...

அவன் : உன் பிடிவாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு.... என் கனவுகளுடன் பயணிக்க புறப்படடி பெண்ணே...என் கனவுகளுடன் உன் கனவுகளையும் சேர்த்தே சுமக்கிறேன்.


அவள் : தோல்வியில்லா காதல் வேண்டும்..
தோற்றாலும்....
தோல்வியிலா உன் நினைவுகள் என்றென்றும் வேண்டும்.!!

அவன் : தோல்வியே இல்லாத காதல் தான் இது ...அப்படியே தோற்றாலும் சேர்ந்து வாழ்தல் தான் காதலில் வெற்றியா....? பிரிந்து படுதலும் காதலில் வெற்றி தானடி பெண்ணே.


அவள் : முற்றுப் புள்ளியிட்டு முடித்துவிட முடியவில்லை...
அப்படியும் இருக்குமோ? ....? இல்லைக்
காலத்தே இழுத்துச் சென்று...
கண்ணீரில் முடித்துவிடவும்... நினைக்குமோ?

அவன் : முற்றுப்புள்ளியிட்டு முடித்துவிடமுடியாததுதான்...
காலத்தே இழுத்து சென்று கண்ணீரில் முடிந்து போனால் போகட்டும் விடு.


அவள்: காற்றில்லா சுவாசம் எப்படி நிகழும் ?
கண்ணீர் இல்லாக் காதல்....??
கண்ணீர் இல்லாக் காதலைக் கற்றுக்கொடுங்கள்...!!!

அவன் : காற்றே தேவை இல்லை !!
உன்னை நானும், என்னை நீயும் சுவாசிப்பதால்....
கண்ணீர் இல்லாக்காதலை நான் உனக்கு
கற்றுக்கொடுத்துவிட்டேன் .


அவள்: உன்னைக் கவியெழுத ...
ஆயிரம் சொற்க்களுடே அணிவகுத்து ..
கவி வகுத்து களைத்தாயிற்று...
எதுவும் உனக்கு உவமையற்று..தோற்றே போகிறது.
முடிவில்லா இப்பயணம்.
முடிந்தவரை
என் அன்பை உன்னிடமே விட்டுச் செல்லட்டும்..!!
காலங்கள் அத்தனையும் உணர்த்தட்டும்
உனக்கே உரியவையாய்..!!!

அவன் : அணிவகுத்த ஆயிரம் சொற்களுக்கும் ...
கவி வகுத்து களைத்த உன்னையும் ..
வணங்கி வெண்சாமரம் வீசாமல் போவேனோ ...?
எனக்கான உவமையாய் உன்னைப் பொருத்திப் பார் ...
நீ மட்டும் தோற்று போகமாட்டாய் ...
நாமிருவரும் வென்றே இருப்போம் .
என் அன்பையும் , நன்றியையும் அன்றி
உனக்கு தர என்னிடம் வேறேதுமில்லை .


அவள் : வாழ்கையில் எல்லாமே கடந்தாயிற்று ...
காதல் ஒன்றைத்தவிர...
அடிக்கடி நீச்சலிட்டு தோற்றுபோவதும் இங்கே தான்..!!!

அவன் : காதலில் மட்டும் நீ நீச்சலிட்டு தோற்று போவதையே நான் விரும்புகிறேன் .
இந்த இடத்தில் மட்டும் நான் சுயநலவாதி என்பதில் எனக்கு தாழ்வேதும் இல்லை ....


அவள்: காதலும் கற்று மற...
அவன்:  மறந்துவிட்டால் காதலில்லை ...


அவள் : காலம் எனக்கு வாழ்வு தந்தால்...
என் உணர்வு முழுக்க நேசித்து காதல் செய்வேன்...

அவன் : என் உணர்வை உன் உணர்வு நேசிக்க காலம் கண்டிப்பாக நமக்கு வாழ்வு தரும்
ஆகையால் காதலி .


அவள்: எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது வாழ்கையே வெறுத்துப் போகும் ...
நிதானப் படுத்திக்கொள்ள ..சில உண்மைகளையே நாடிச் செல்லும் மனம்...
என்னையே நான் தேடி கொண்டு தான் இருக்கிறேன் .

அவன்: என்னில் தொலைத்துவிட்ட உன்னை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டாய்...
உன் எதிர்பார்ப்புகளை அர்த்தமுள்ளதாக்கிகொண்டு ...
வெறுத்துப்போகும் வாழ்கையை வெறுத்துவிடு.


அவள் : வாழ்கையை காதலிக்க தொடங்கும் போது வாழ்கையே முடிந்து விடும்..
அவன் : முடிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் ...


அவள்: கவிதைகளை காதலித்து ..
கணணி முன் கழியும் நாட்கள்...
கண்ணைச் சுற்றி கருவளையங்கள் ...
அழகு குறைந்தே போகிறதாம்..:
இனி வேண்டவே வேண்டாம் ..நிறுத்திவிடு!! ..
இது அம்மா..

அவன் : உன் அம்மாவிடம் சொல் ...
என்னவன் என்னை சுற்றியுள்ள கருப்பை வெளுக்கசெய்தவன் என்று .....
என்னை அழகாக்கியவனும் , அர்த்தமுள்ளவனாக்கியவனும் அவன்தானென்று.


அவள்: என் தனிமைப் பொழுதுகளை தாங்கி நிற்கும் - உன் நினைவுகள் ..
நினைவுகளுடே நிலைத்து நிற்கும் - என் சுகமான கனவுகள் ...!!!

அவன் : உன் தனிமை பொழுதுகளுடன் நான் உன்னுடன் கலந்திருப்பதை நீ அறியாமல் போனது ஏனோ ...?
உன் சுகமான கனவிற்கு காரணம் உன்னுடன் நான் கலந்திருப்பது தானோ...?


அவள் : என் வாழ் நாளின் இறுதி மணித்துளிகள்........
கணக்கிட்டு பார்த்துகொள்கிறேன்....................
.......................................................................
.......................................................................

அவன் : நீ கணக்கிடும் ஒவ்வொரு மனித்துளிகளுக்குள்ளும்
நானும் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாமல் உனது எண்ணிக்கையை தொடர் ...


அவள் : என்னை எழுதவைத்து ..காத்திருந்து பதில்களாய் வரும் நீ..
இன்றுமட்டும் காக்கவைத்து வரமறுப்பது ஏனோ?...!!!!!

அவன் : உன்னை எழுதவைப்பதற்க்காகவே நான் உன்னை காத்திருக்க வைத்திருப்பேனோ... ?
உன் எழுத்தில் தானே உன் ....சாரி ...சாரி... நம் எதிர் காலமே அடங்கி இருக்கிறது .


அவள் : எதிர் பார்க்காத வேளைகளில் என்னுள்
நீ கவிதையாகிறாய்.

அவன்: என் ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் நீ கவிதையாய் ஒழிந்திருக்கிறாய்...
கவிதையாய் நாமிருவரும் பேசிக்கொண்டது பசுமையாய் இப்போதும்..... எப்போதும் .


அவள் : என் கல்லறைஎங்கும் - உன் கண்ணீரால் குளிப்பாட்டி ...
வெள்ளை ரோஜா மலர்கொண்டு - மணம் வீசி விட்டு போ...

அவன் : நாம் ஈருடல் தான்....
உயிர் ஒன்றே என்பதை நினைவு படுத்துகிறேன் உனக்கு...


அவள் : ஏய் சின்னப் பெண்ணே ,
என்னாச்சு உனக்கு ?
கரம் குவித்து ...
பூக்களுக்குள் முகம்புதைத்து ...
ஏன் அழுகிறாய்....??? okii
அழுது தீர்த்து விடு...

அவன் : மௌனமாய்.... ஆறுதல் வார்த்தைகள் தேடிக்கிடைக்காமல்...

2 comments:

  1. எங்கேயோ போயிட்டீங்க...~!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எப்பா..... செம போங்க.... வாழ்க வாழ்க

    ReplyDelete